×

கரூர்-திருச்சி சாலையில் விபத்துக்களை தடுக்க பேரிகார்டு அமைக்க கோரிக்கை

கரூர், அக். 2: விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கரூர் ராமானூர் வளைவு சாலை பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர்- திருச்சி சாலையில் தெரசா கார்னர் பகுதியில் இருந்து ராமானூர், பசுபதிபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ராமானூர், கொளந்தானூர் சாலையில் சென்று வருகிறது. கரூர் பகுதியில் இருந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு செல்பவர்களும் இந்த சாலையில் செல்கின்றனர்.

இந்நிலையில், கொளந்தானுர் ராமானூர் இடையே வளைவு பாதை உள்ளது. மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெறுகின்றன. இந்த பகுதியில் டாஸ்மாக் கடையும் செயல்படுவதால் வாகன ஓட்டிகள் வளைவு பாதையை கடந்து செல்ல மிகுந்த சிரமமடைகின்றனர். எனவே, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வளைவு பாதையோரம் பேரிகார்டு அல்லது வேகத்தடை அமைக்கப்பட வேண்டும்.

The post கரூர்-திருச்சி சாலையில் விபத்துக்களை தடுக்க பேரிகார்டு அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karur-Tiruchi road ,Karur ,Karur Ramanoor bend road ,Teresa ,Ramanoor ,Pashupathipalayam ,Dinakaran ,
× RELATED கரூர் வெங்கமேடு அருகே பாம்பு கடித்து பெண் பலி