உருளைக்கிழங்கு – 1 கப் (வேகவைத்து மசித்தது)
மசித்த பனீர் – 1 கப்
மல்லித்தழை – 2 டேபிள் ஸ்பூன் (பொடித்தது)
சீரகம் – 1 /2 டீஸ்பூன்’
உப்பு – 1 /4 டீஸ்பூன்’
பச்சைமிளகாய் – 1 சிறியது (பொடித்தது)
எண்ணெய் – பொரிக்க
மாவு தயாரிக்க தேவையானவை :
மைதா – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 4 டேபிள் ஸ்பூன்
கிரேவி செய்வதற்கு தேவையானவை :
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
சீரகம் – 1 டீஸ்பூன்’
தக்காளி – 2 நடுத்தரமானது
மிளகாய்த்தூள் – 1 /4 டீஸ்பூன்’
மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 /4 டீஸ்பூன்’
மைதா – 1 டீஸ்பூன்’
கிரீம் – 1 /4 கப்
இஞ்சி துருவியது – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
மஞ்சள்தூள் – 1 /2 டீஸ்பூன்’
உப்பு – 1 /2 டீஸ்பூன்’
மல்லித்தழை – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை :
கொடுத்துள்ள பொருட்களை நன்றாக கலந்து கொள்ளவும்.கையில் சிறிது எண்ணெய் தடவி கலந்ததை 16 பாகங்களாகப் பிரித்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.மைதா மாவை நான்கு டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளவும்.வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளவும்.எண்ணெய் சூடானதும் பனீர் உருண்டைகளை ஒவொன்றாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
கிரேவி செய்முறை
முதலில் மிக்ஸ்சியில் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவு,கிரீம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தனியே வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பெருங்காயம், சீரகம் சேர்க்கவும்.பின் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது, மல்லித்தூள், மஞ்சள், மிளகாய்த்தூள் சேர்த்து நான்கு நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.தக்காளி விழுதை எண்ணெய் பிரிந்து பாதியாகும் வரை வதக்கவும்.மிதமான தீயில் கிரீம் மற்றும் மாவு கலவை, உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து 8 நிமிடங்கள் வரை வதக்கவும்.பின் கரம் மசாலா, மல்லிதழை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.பொரித்து வைத்துள்ள கோஃப்தாக்களைச் சேர்த்து கொதிக்க ஆரம்பிக்கும்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
The post மலாய் கோஃப்தா appeared first on Dinakaran.