செட்டிநாட்டு பழ பாயாசம்

தேவையான பொருட்கள்:

பால் – 2 கப்
கன்டென்ஸ்ட் மில்க் – ⅓ கப்
மாதுளைப் பழம் – 1 (பெரியது)
மாம்பழம் – 1 (பெரியது புளிப்பில்லாதது)
ஆப்பிள் – 1
திராட்சை – ஒரு கொத்து (15-20 புளிப்பில்லாதது)
வாழைப்பழம் – 1
பாதாம் – 5
பிஸ்தா – 5
ஏலக்காய் – 2
சர்க்கரை – 1 ஸ்பூன்

அரைக்க

பச்சரிசி – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 10
பாதம் – 10

செய்முறை:

பச்சரிசியை சுத்தமாக தண்ணீர் சேர்த்து அலசி 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.முந்திரி பாதாமையும் நன்றாக கழுவி விட்டுகுறைந்தது 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.நன்றாக ஊறியதும் பாதாமின் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.சுத்தம் செய்த பாதம், ஊற வைத்த முந்திரி மற்றும் பச்சரிசியை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உற்றி அடுப்பில் வைத்து சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சூடானதும் அடுப்பை அணைக்கவும்.அதில் திராட்சையை சேர்த்து 2-3 நிமிடங்கள் வைத்திருந்து அலசி எடுத்து கொள்ளவும்.திராட்சையை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.மாதுளை பழத்தை தோல் உரித்து எடுத்து கொள்ளவும்.ஆப்பிள் மற்றும் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.வாழைப் பழத்தை மட்டும் தனியாக பாலில் சேர்க்கும் போது சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.இது வாழைப்பழம் நிறம் மாறுவதை தடுக்கும்.பாதாம் மற்றும் பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.உங்களுக்கு விருப்பமான அல்லது வீட்டில் இருக்கும் நட்ஸ் வகைகளையும் சேர்த்து கொள்ளலாம்.மிக்ஸி ஜாரில் ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை சேர்க்கவும்.பால் நன்றாக பொங்கியதும் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.அதனுடன் அரிசி மற்றும் நட்ஸ் சேர்த்து அரைத்த கலவையை சேர்த்து விடாமல் கிளறவும்.அதனுடன் கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்றாக கிளறவும்.கடைசியாக அரைத்து வைத்த ஏலக்காய் மற்றும் சர்க்கரை பொடி சேர்த்து பால் சிறிதளவு திக்கானதும் அடுப்பை அணைக்கவும்.பால் ரொம்பவும் திக்காகி விட்டால் ஆற வைக்கும் போது கெட்டியாகி விடும்.பால் நன்றாக ஆறியதும் நறுக்கி வைத்த பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்த்து நன்றாக கலந்து விட்டால் செட்டிநாட்டு பழ பாயசம் ரெடி!

 

The post செட்டிநாட்டு பழ பாயாசம் appeared first on Dinakaran.