திரிகடுகு கஷாயம்

தேவையானவை:

சுக்கு – 25 கிராம்,
மிளகு – 25 கிராம்,
திப்பிலி – 25 கிராம் (இதுவே திரிகடுகுப் பொடி).

செய்முறை:

எல்லாவற்றையும் இடித்துப் பொடி செய்யவும். அடுப்பில் பாத்திரம் வைத்து 1½ டம்ளர் நீர் ஊற்றி கொதி வந்ததும், 2 டீஸ்பூன் போட்டு கொதித்தது பாதியாகும் வரை காய்ச்சி இறக்கி வடிகட்டி சூடாக இருக்கும் போதே பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கவும். மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமலுக்கேற்றது.

The post திரிகடுகு கஷாயம் appeared first on Dinakaran.