மைதா – 250 கிராம்,
முட்டை – 5,
வெண்ணெய் – 250 கிராம்,
பொடி செய்த சர்க்கரை – 250 கிராம்,
பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் – 2 டீஸ்பூன்,
கிஸ்மிஸ் – 50 கிராம்,
முந்திரி – 100 கிராம்.
செய்முறை:
மைதாவுடன் பேக்கிங் சோடா சேர்த்து சலித்துக் கொள்ளவும். சர்க்கரையும், வெண்ணெயையும் சேர்த்து நன்கு நுரை வரும்படி அடிக்கவும். முட்டையைத் தனியாக நுரை வரும்படி அடித்துக் கொள்ளவும். சர்க்கரை வெண்ணெய் கலவையுடன் முட்டையைச் சேர்க்கவும். கிஸ்மிஸ், மாவையும், முந்திரியையும் கலந்து வைத்துள்ள கலவையுடன் சேர்க்கவும். கலக்கும் பொழுது ஒரே திசையில் மிருதுவாகக் கலக்க வேண்டும். கேக் பாத்திரத்தில் வெண்ணெய், சிறிது மைதா கொண்டு சலித்து கேக் மாவை அதில் பாதி அளவுக்கு ஊற்றவும். முன்னதாக கேக் ஓவனை 120 டிகிரியில் சூடு செய்து அதில் தயாரித்து வைத்துள்ள கேக் பாத்திரத்தை வைக்கவும். கேக் ஓவனை 200 டிகிரி சூட்டில் வைத்து 45 மணி நேரம் வேகவைத்து எடுக்கவும்.
The post ஸ்பாஞ்ச் கேக் appeared first on Dinakaran.