×

கட்சியில் யாரும் வளரக் கூடாது என நினைக்கிறார் சீமான்: கிருஷ்ணகிரி மாவட்ட நா.த.க நிர்வாகிகள் அதிருப்தி!

கிருஷ்ணகிரி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள்; நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக கிருஷ்ணகிரி மண்டல ஒருங்கிணைப்பாளர் கரு.பிரபாகரன் அறிவித்துள்ளார். மேலும் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தனர். நாம் தமிழர் கட்சியில் யாரும் வளரக் கூடாது என சீமான் நினைக்கிறார்.

கட்சி ஆரம்பித்த பொழுது இருந்த பல மானில பொறுப்பாளர்கள் தற்போது கட்சியில் இல்லை. தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக வளர்ந்த பிறகு தற்போது செயல்பாடுகள் சரி இல்லை. யாருக்கும் அங்கிகாரம் கிடைக்க கூடாது என உழைத்தவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள். தமிழகத்தில் எந்த பொருப்பாளரளையும் அழைத்து சீமான் ஆலோசனை நடத்தவில்லை. சீமான் பணத்துக்கு விலைபோய்விட்டார் என கருதுகிறோம். செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம் என்ற பெயரில் கையெழுத்து மட்டுமே வாங்கப்படுகிறது.

மாதம் 2.5 லட்சம் வாடகை, 3 பேருக்கு 15 வேலை ஆட்கள் என சொகுசாக வாழ்கிறார்கள், ஆனால் ஒரு மண்டல செயலாளர் மனைவி ஏரி வேலைக்கு தான் சென்று கொண்டிருக்கிறார்கள். கட்சியில் இருந்து விலகிய முன்னணி பொறுப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கட்சியை கட்டமைத்தால் இணைந்து செயல்பட தயார். இல்லையென்றால் விலகியவர்களை ஒன்றிணைத்து புதிய தமிழ் தேசிய இயக்கம் அமைக்கப்படும் என்றும் கூறினர்.

The post கட்சியில் யாரும் வளரக் கூடாது என நினைக்கிறார் சீமான்: கிருஷ்ணகிரி மாவட்ட நா.த.க நிர்வாகிகள் அதிருப்தி! appeared first on Dinakaran.

Tags : Seaman ,Krishnagiri District UN Th ,KRISHNAGIRI ,DISTRICT ADMINISTRATORS ,TAMIL PARTY ,SEEMAN ,Dinakaran ,
× RELATED எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம்:...