கோயில் நந்தவனங்களை பாதுகாக்க நடவடிக்கை: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: கோயிலில் உள்ள நந்தவனங்களை பாதுகாக்க கோரிய வழக்கில், இதுவரை எடுத்த நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஜெய வெங்கடேஷ். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களில் நந்தவனம் அமைக்கப்பட்டு அதில் செடிகள், பூந்தோட்டம் வைக்கப்பட்டிருக்கும், அங்கு பக்தர்கள் ஓய்வு எடுப்பார்கள்.

ஒரு சில பிரசித்தி பெற்ற கோயில்களில் மட்டுமே நந்தவனம் முறையாக பராமரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு உள்ளது. கோயில்களில் உள்ள மரங்கள், குளங்கள் மற்றும் நந்தவனத்தை பராமரிக்க பாதுகாவலரை நியமிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி அமர்வு, கோயில்களில் உள்ள நந்தவனங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய, அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை அக். 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

The post கோயில் நந்தவனங்களை பாதுகாக்க நடவடிக்கை: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: