சென்னையில் விபத்தில் உயிரிழந்த பெண் எஸ்ஐ, ஏட்டு உடல்கள் 21 குண்டுகள் முழங்க தகனம்

மதுரை:சென்னை, திருவொற்றியூர் அண்ணாநகரை சேர்ந்தவர் ஜெய (38). இவர் மாதவரம் பால்பண்ணை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐயாக பணியாற்றினார். இங்கு ஏட்டாக பணியாற்றியவர் நித்யா. இருவரும் சென்னையிலிருந்து மேல்மருவத்தூருக்கு டூவீலரில் சென்றனர். மேல்மருத்துவத்தூர் அருகே சிறுநாகலூர் பகுதிக்கு சென்றபோது, கார் மோதிய விபத்தில் இருவரும் பலியாயினர். விபத்தில் பலியான எஸ்ஐ ெஜயஸ்ரீயின் வீடு மதுரை மாவட்டம், ஆனையூர் கூடல்புதூர், வைகை 2வது தெருவில் உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின் ஜெயயின் உடல் போலீஸ் ஆம்புலன்ஸ் மூலம் மதுரையில் உள்ள சொந்த வீட்டிற்கு நேற்று வந்தது.

அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, மதுரை தத்தனேரி மயானத்திற்கு மதியம் 1.50 மணிக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க ஜெயயின் உடல் தகனம் செய்யப்பட்டது. ஏட்டு நித்யாவின் உடல் அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம், கொசவப்பட்டிக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வரப்பட்டது. நேற்று காலை 10 மணியளவில் கொசவப்பட்டி மயானத்தில், 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதை செலுத்தப்பட்டு நித்யாவின் உடல் எரியூட்டப்பட்டது.

The post சென்னையில் விபத்தில் உயிரிழந்த பெண் எஸ்ஐ, ஏட்டு உடல்கள் 21 குண்டுகள் முழங்க தகனம் appeared first on Dinakaran.

Related Stories: