×
Saravana Stores

காலாண்டு விடுமுறையொட்டி சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்

 

திருப்பூர், அக். 1: பனியன் தொழில் அதிகம் நடைபெறும் திருப்பூரில் வெளி மாவட்டத்தினர் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில், பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை கடந்த வாரத்திலிருந்து விடப்பட்டுள்ளது. விடுமுறையை 7ம் தேதி வரை அதிகரித்து அரசு அறிவித்துள்ளதால் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு ரயில் மூலம் சென்றனர்.

இதனால், திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. திருப்பூரில் தென்மாவட்டங்களான மதுரை, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் மாவட்ட மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களுக்கு போதுமான ரயில் வசதி இல்லை. நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இரவும், பயணிகள் ரயில் காலை நேரத்திலும் வருகிறது. இதற்கு இடையில் தென் மாவட்டங்களுக்கு திருப்பூரிலிருந்து ரயில் சேவை இல்லை. எனவே, பண்டிகை காலம் நெருங்குவதால் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காலாண்டு விடுமுறையொட்டி சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,
× RELATED கஞ்சா விற்ற 2 பேர் கைது