×
Saravana Stores

ஈரோடு கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

 

ஈரோடு, அக். 1: ஈரோடு கோட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (3ம் தேதி) ஈரோடு கோட்டாட்சியர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இக்கூட்டத்தில் நிலங்களை நில அளவைத்துறை மூலம் அளவீடு செய்தல், விவசாய நிலங்கள், பாதைகள், ஓடைகளில உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விவசாயிகள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்து உரிய தீர்வு காணலாம் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

The post ஈரோடு கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Erode district ,Erode ,Perundurai ,Modakurichi ,Kodumudi ,Dinakaran ,
× RELATED டிரைவர், நடத்துனர்கள் எதிர்பார்ப்பு:...