×
Saravana Stores

பக்தர்களின் வசதிக்காக பேட்டரி கார் சேவை

உடன்குடி, செப்.30: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பேட்டரி கார் சேவையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள கடலில் நீராடி சிதம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று பின்னர் முத்தாரம்மன் கோயிலுக்கு வருவர். இதனால் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

பக்தர்களின் வசதிக்காக முத்தாரம்மன் கோயிலில் இருந்து கடற்கரை வரை பேட்டரி கார் சேவை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மாவட்ட திமுக பிரதிநிதி மதன்ராஜ் கோரிக்கை மனு கொடுத்திருந்தார். இதையடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வேண்டுதலின்பேரில் திருநெல்வேலி நந்தாதேவி பயோ சக்தி நிறுவன ஆதிபர் வி.ஏஸ்.நடராஜன் ஏற்பாட்டில் பேட்டரி கார் கோயிலுக்கு வழங்கப்பட்டது. இந்த கார் சேவையை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் தொழிலதிபர் நடராஜன், மாநில திமுக வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோ, கோயில் அறங்காவலர்கள் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி, உடன்குடி யூனியன் துணைச்சேர்மன் மீரா சிராஜூதீன், பேரூராட்சி துணைத்

தலைவர் சந்தையடியூர் மால்ராஜேஷ், உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜான்பாஸ்கர், அஸ்ஸாப், பாலாஜி, குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து துணைத்தலைவர் கணேசன், கோயில் அயல் பணி அலுவலர் வெங்கடேஷ்வரி, நூலகர் மாதவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

The post பக்தர்களின் வசதிக்காக பேட்டரி கார் சேவை appeared first on Dinakaran.

Tags : Ebengudi ,Minister ,Anitha Radhakrishnan ,Kulasekaranpattinam Mutharamman Temple ,Chitambareswarar Temple ,
× RELATED திருச்செந்தூர் அருகே மாணவிகளுக்கு...