- திருப்பூர்
- திருப்பூர் நகர 3வது மண்டல 3வது மாநாடு
- அகில இந்திய இளைஞர் மன்றம்
- AID UC சங்கம்
- தாராபுரம் சாலை
- மண்டல தலைவர்
- தினேஷ்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகராட்சி மாவட்டம்
- ரவிச்சந்திரன்
- தின மலர்
திருப்பூர்,நவ.18: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் திருப்பூர் மாநகர் மூன்றாவது மண்டல 3வது மாநாடு தாராபுரம் சாலை எஐடி யூசி சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மண்டல தலைவர் தினேஷ் தலைமை தாங்கினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வரும்மாறு: திருப்பூர் மாநகரம் மூன்றாவது மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் மாணவர்கள் பயன்படுகிற விதமாக நூலகங்கள் அமைக்கப்பட வேண்டும்.
சுற்றுச்சூழல் மற்றும் பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களாக மனசோர்வுக்கு ஆட்படுகின்ற இளைஞர்களை மீட்டெடுக்க அனைத்து வார்டுகளிலும் நவீன உடற்பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும். மாநகரில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் டைட்டல் பார்க் அமைத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
திருப்பூர் தெற்கு தொகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் உருவாக்கி தரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது மண்டல செயலாளர் செந்தில்குமார், கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் காட்டே ராமசாமி,அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநகர மாவட்ட கன்வினர் அரவிந்த் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மூன்றாவது மண்டல அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
The post மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் நவீன உடற்பயிற்சி கூடம் appeared first on Dinakaran.