×

காங்கயம் இன மாடுகள் ரூ.11 லட்சத்துக்கு விற்பனை

 

காங்கயம்,செப்.30: காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.11 லட்சத்திற்கு விற்பனையானது. காங்கயம் தாலூகா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகிறது.இந்த சந்தையில் காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.நேற்றைய சந்தையின் போது 65 கால்நடைகள் விற்பனைக்கு வந்திருந்தன.

இதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.81 ஆயிரம் வரை விற்றது.பசுங்கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது. காளைக்கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை விற்க்கப்பட்டது.நேற்றைய சந்தையில் 30 கால்நடைகள் ரூ.11 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது என சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

The post காங்கயம் இன மாடுகள் ரூ.11 லட்சத்துக்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Kangayam ,Nattakkadaiyur ,Old Kottai ,Dinakaran ,
× RELATED லண்டனும்…அண்ணாமலையும்… சீமான் கருத்து