பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து

விருதுநகர்: மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சாலை ஓரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை கால்நடை உண்பதால், உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதனால் குப்பை தொட்டிகள் வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மளிகை கடைகள், உணவு கடைகள், தேநீர் கடைகள் தின் பண்டம் விற்பனை கூடங்கள் அமைந்துள்ளது. இந்த வர்த்தக நிறுவனங்களில் இருந்து சுத்தம் செய்யப்படும் கழிவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளுடன் உணவுகளை வர்த்தகர்கள் சாலை ஓரத்தில் கொட்டி விடுகின்றனர். இதனால் குப்பைகள் தேக்கம் அடைந்து விடும். இதனை உண்ணுவதற்காக மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஆடுகள், மாடுகள் போன்ற கால்நடை பிராணிகள் அதிகமாக வருகின்றன.இவ்வாறு வர்த்தக நிறுவனங்களால் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் உணவுப் பொருட்களை கால்நடைகள் உண்ணுகின்றன.

இந்த உணவு கழிவு பொருட்களில் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருளில் சேர்ந்து வயிற்றுக்குள் சென்றவுடன் கால்நடைகளின் உயிர்களை பறித்து விடும். இதனால் வருங்காலங்களில் ஆடுகள், மாடுகள் போன்ற கால்நடைகளின் உயிரினங்கள் அழிவை ஏற்படுத்தும். அதனால் மாவட்டம் முழுவதும் வர்த்தக நிறுவனங்களுக்கு முன்பு கழிவு குப்பைகளை சேகரிக்கும் வகையில், குப்பை தொட்டி வைப்பதற்கும் அந்த குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து appeared first on Dinakaran.

Related Stories: