விதிமீறிய டிராக்டர்கள் பறிமுதல்

தேனி, செப். 29: தேனி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது விதிமீறிய 80 டிராக்டர்களில் 12 டிராக்டர்களை போலீசார் நேற்று முன் தினம் பறிமுதல் செய்தனர். தேனி மாவட்டத்தில் கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வாகனங்களில் வைத்து ஊர்வலங்கள் கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

இந்த ஊர்வலங்களின் போது போலீசார் அறிவுறுத்திய விதிமுறைகளை பின்பற்றாமலும், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளை அதிக சப்தத்துடன் வைத்து சென்றதாக தேனி மாவட்ட்தில் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் சம்மந்தப்பட்ட 80 டிராக்டர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இவ்வழக்கில சம்மந்தப்பட்ட 12 டிராக்டர்களை போலீசார் கைப்பற்றினர். மீதமுள்ள டிராக்டர்களின் பதிவு எண் ஆகியவை குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த டிராக்டர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post விதிமீறிய டிராக்டர்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: