பயிர் காப்பீடு செய்வது அவசியம்; வேளாண்துறை அழைப்பு

மதுரை, செப். 29: பயிர் காப்பீடு செய்யும்படி மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் சுப்புராஜ் வௌியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்டத்தில் 2024-2025ம் ஆண்டிற்கு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள மக்காச்சோளம், பருத்தி மற்றும் பச்சைப்பயறு உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம். விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்கள் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஈடு செய்து, வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் இவ்வாண்டில் காரீப் பருவத்தில் வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதிகளில் மக்காசோளம், பருத்தி மற்றும் பச்சைபயறு ஆகியவற்றுக்கு செப்.30ம் தேதி வரை விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம். இதில் காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு மக்காசோளத்திற்கு ரூ.588, பருத்திக்கு ரூ.200, பச்சை பயறுக்கு ரூ.308 செலுத்த வேண்டும். இந்த ெதாகையை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்கு நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு பதிவு செய்ய வேண்டும். அப்போது விவசாயிகள் தங்கள் பெயர் மற்றும் விலாசம், நிலப்பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களை சாியாக கவனித்து பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம். எனவே பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பயிர் காப்பீடு செய்வது அவசியம்; வேளாண்துறை அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: