×

ஆடுகளை வேட்டையாடும் தெரு நாய்களை கட்டுப்படுத்தக்கோரி போராட்டம்

 

திருப்பூர், செப்.28: திருப்பூர் மாவட்டம் காங்கயம் சுற்று வட்டார பகுதிகளில் தெரு நாய்களால், ஆடுகள் வேட்டையாடப்பட்டது. வீராணம்பாளையம் செந்தில்குமார் என்பவருக்கு தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 7 ஆடுகள் உயிரிழந்தன.

இந்நிலையில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர்.இந்நிலையில் பலியான ஆடுகளுடன் கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். நல்லூர் சிக்னல் அருகே அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post ஆடுகளை வேட்டையாடும் தெரு நாய்களை கட்டுப்படுத்தக்கோரி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Kangayam ,Tirupur district ,Veeranampalayam Senthilkumar ,Gangayama Panchayat ,
× RELATED திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே...