×

335 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்

உடுமலை, செப்.27: உடுமலை, குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் உள்ள பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பூளவாடி, குடிமங்கலம் மற்றும் பெதப்பம்பட்டி ஆகிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர். பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 150 பேருக்கும், குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 105 பேருக்கும், பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 80 பேருக்கும் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அணிக்கடவு கிரி, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், கிளை திமுக செயலாளர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post 335 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Pethapambatti Government Higher Secondary School ,Udumalai, Kudimangalam North Union ,Tirupur South District ,Padmanapan ,
× RELATED கிளுவன்காட்டூர் கிளை வாய்க்காலை தூர் வார கோரிக்கை