×

திருவெறும்பூர் அடுத்த அசூரில் நடைபெற்ற மனுநீதி முகாமில் செல்போன் திருடியவர் கைது

திருச்சி, செப்.26: திருச்சி அரியமங்கலம் பகுதியில் வீடுபுகுந்து செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் முத்து செட்டியார் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி உதயா (37). மாநகராட்சி துப்புரவு பணியாளர். இவர் கடந்த செப்.12ம்தேதி வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரின் இரண்டு மகள்கள் கதவை தாழிடாமல் விட்டுவிட்டனர்.

இந்நிலையில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தலையணை அருகே இருந்த இரண்டு செல்போனை திருடினார். இதனை கண்ட உதயா மற்றும் அவரது கணவர் பிரபாகரன் மர்ம நபரை பிடித்து அரியமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். விசாரனையில் அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம் எம்ஜிஆர் தெரு பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (19) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

The post திருவெறும்பூர் அடுத்த அசூரில் நடைபெற்ற மனுநீதி முகாமில் செல்போன் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Azur ,Thiruvarumpur ,Trichy ,Trichy Ariyamangalam ,Prabhakaran ,Tirichi Ariyamangalam ,Upper Ambikapuram Muthu Setiar Street ,Udaya ,Asylum Camp ,
× RELATED வலை தளத்தில் அல்ல… களத்தில் வேலை...