×

கஞ்சா விற்ற 4 பேர் கைது

திருச்சி, செப்.26: திருச்சியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது காஜாபேட்டை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் கஞ்சா விற்றதாக, காஜா பேட்டை கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்த யேசு (57) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கொளஞ்சி (58) ஆகிய இருவர் மீது பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 60 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று சிங்கார தோப்பு பகுதியில் கஞ்சா விற்றதாக நத்தர்ஷா பள்ளிவாசல் சாமியார் தோப்பூர் பகுதியை சேர்ந்த நசுருதீன் (25) என்ற வாலிபர் மற்றும் காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி அருகே கஞ்சா விற்றதாக வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (19) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கஞ்சா விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Balakarai ,Gajapet ,Gaja ,Dinakaran ,
× RELATED திருச்சி மாநகரில் முக்கிய சாலைகளை...