இந்தியாவில் ‘ஒரே நாடு ஒரே டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்’ என்ற இலக்கை எட்ட வேண்டும் : மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

டெல்லி : இந்தியாவில் ‘ஒரே நாடு ஒரே டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்’ என்ற இலக்கை எட்ட வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “செயற்கை நுண்ணறிவு (AI), Machine Learning உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களவை அலுவல்கள், பல மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.களின் உரைகள் அவரவர் தாய்மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. 1992 முதல் தற்போது வரை மக்களவை அலுவல்கள் அடங்கிய 18,000 மணி நேர காட்சிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. மக்களவை போல், மாநில சட்டப்பேரவைகளும் AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் ‘ ஒரே நாடு ஒரே டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்’ என்ற இலக்கை எட்ட முடியும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post இந்தியாவில் ‘ஒரே நாடு ஒரே டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்’ என்ற இலக்கை எட்ட வேண்டும் : மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா appeared first on Dinakaran.

Related Stories: