தெலுங்கானாவில் திருப்பதி என அழைக்கப்படும் கோயில் லட்டில் கலப்படமா?: ஆந்திராவில் உள்ள கோயில்களின் பிரசாதங்களை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: திருப்பதி லட்டு சர்ச்சையை தொடர்ந்து ஆந்திராவில் உள்ள முக்கிய கோயில்களில் பிரசாதங்களை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பான ஆய்வில் அது உறுதி செய்யப்பட்டதை அடுத்து திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய 5 நிறுவனங்களில் ஒரு நிறுவனமான திண்டுக்கலை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து அந்த நிறுவனத்துக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், ஆந்திராவில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களின் பிரசாதங்களையும் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் முடிவு எடுத்துள்ளது.

இந்த கோயில்களுக்கு சென்று பிரசாதங்களின் மாதிரிகளை அதிகாரிகள் சேகரிக்க உள்ளனர். பிரசாதங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இதனிடையே தெலுங்கானாவின் திருப்பதி என்று அழைக்கப்படும் யதாத்ரி கோயில் பிரசாதத்திலும் கலப்படம் இருக்கலாம் என்று பக்தர்கள் தெரிவித்த சந்தேகத்தை தொடர்ந்து லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யை பரிசோதனைக்காக யதாத்ரி கோயில் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.

The post தெலுங்கானாவில் திருப்பதி என அழைக்கப்படும் கோயில் லட்டில் கலப்படமா?: ஆந்திராவில் உள்ள கோயில்களின் பிரசாதங்களை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.

Related Stories: