திமுக கூட்டணியில் விரிசல் உருவாக வாய்ப்பும் இல்லை: திருமாவளவன் பேட்டி

கோவை: திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை, கூட்டணியில் விரிசல் உருவாக வாய்ப்பும் இல்லை என்று கோவை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

“என்னுடைய ஊடகப் பக்கத்தில் பதிவான ஒரு சின்ன வீடியோவில் இருந்த ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற கருத்தை விவாதத்திற்கு பலரும் எடுத்துக் கொண்டார்கள்; அந்த விவாதம் மேலும் மேலும் விவாதங்களுக்கு இடம் அளித்து விட்டது; அதனால், திமுக – விசிக இடையில் எந்த சிக்கலும் எழாது, எழுவதற்கு வாய்ப்பும் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., பேட்டி அளித்துள்ளார்.

The post திமுக கூட்டணியில் விரிசல் உருவாக வாய்ப்பும் இல்லை: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: