லட்டில் குட்கா பாக்கெட் இருந்தது உண்மை இல்லை: திருப்பதி தேவஸ்தானம் தகவல்


திருமலை: திருப்பதி லட்டு தயாரிப்பது அனைத்தும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. அதில் குட்பா பாக்கெட் இருந்தது உண்மை இல்லை என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் புகையிலை பாக்கெட் இருப்பது போல் சில பக்தர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக நேற்று திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: திருப்பதி லட்டு பிரசாதத்தில் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது உண்மை இல்லை. திருமலையில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் வைஷ்ணவ பிராமணர்கள் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான லட்டுகளை மிகுந்த பக்தியுடன் தயார் செய்கிறார்கள். இந்த லட்டுகள் தயாரிப்பது அனைத்தும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகள் மத்தியில் லட்டு தயாரிக்கும் பகுதியில் புகையிலை இருந்ததாக பிரசாரம் செய்யப்படுவது வருந்தத்தக்கது.

The post லட்டில் குட்கா பாக்கெட் இருந்தது உண்மை இல்லை: திருப்பதி தேவஸ்தானம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: