ரயில்கள் தடம் புரண்டதில் ரயில்வே உலக சாதனை:: மம்தா கேலி

கொல்கத்தா: ரயில்கள் தடம் புரண்டதில் இந்திய ரயில்வே உலக சாதனை படைத்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா கேலி செய்துள்ளார். நாடு முழுவதும் ரயில்கள் பல இடங்களில் தடம் புரண்டு வருகின்றன. சமீபகாலமாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இதுபற்றி அறிந்ததும் முதல்வர் மம்தா கூறுகையில்,’ ரயில்வேயில் என்ன நடக்கிறது? இன்றும் ரயில் தடம் புரண்டதாக செய்தி வருகிறது.

ரயில் தண்டவாளத்தில் உலக சாதனை படைத்துள்ளது. ஆனால் யாரும் எதுவும் கூறவில்லையா? மக்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. ரயிலில் பயணிக்கவே மக்கள் பயப்படுகிறார்கள். ரயில்வே அமைச்சர் எங்கே? தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்பது மட்டும் பலன் அளிக்காது. ஆபத்து ஏற்படும் போது மக்கள் பக்கம் இருக்க வேண்டும்’ என்றார்.

The post ரயில்கள் தடம் புரண்டதில் ரயில்வே உலக சாதனை:: மம்தா கேலி appeared first on Dinakaran.

Related Stories: