தேவையானவை
பாசுமதி அரிசி – 2 கப்
சோயா உருண்டைகள் – 15
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 3
பச்சைமிளகாய் – 1
இஞ்சி – 1துண்டு
பூண்டு -6-5 பல்
புதினா – அரை கட்டு
மல்லித்தழை – கால் கட்டு
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
புளித்த தயிர் – கால் கப்
எலுமிச்சை – 1
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2
நெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
அரிசியை சுத்தம் செய்து ஊற வைக்கவும். சோயாவை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து குளிர்ந்த நீரில் அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கவும். மிளகாயை கீறி வைக்கவும். இஞ்சி, பூண்டை அரைத்து வைக்கவும். புதினா மல்லியை ஆய்ந்து சுத்தம் செய்யவும். குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காயை தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, சோயா, மிளகாய்த்தூள் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி தயிர், எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். பின் ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து மூடி வெயிட் போடவும். ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து பத்து நிமிடம் வைத்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
The post சோயா பிரியாணி appeared first on Dinakaran.