மருத்துவ நிதியுதவியாக பத்திரிகையாளர்கள் 6 பேருக்கு ரூ10 லட்சத்துக்கான காசோலை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்


சென்னை: மருத்துவ நிதியுதவியாக 6 பத்திரிகையாளர்களுக்கு மொத்தம் ரூ10 லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். பத்திரிகையாளர் நல நிதி திட்டத்தின் கீழ் 19.7.2022 அன்று பிறப்பித்த அரசாணையின்படி பத்திரிகையாளர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும்போது ஏற்படும் மருத்துவ செலவினை ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு நிதியுதவியாக ரூ2 லட்சத்து 50 ஆயிரம் வரையும், பத்திரிகையாளர் ஓய்யூதியம் பெறுபவர்களுக்கு பத்திரிகையாளர் நல நிதி தொகையில் இருந்து 50%தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.ெப.சாமிநாதன் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் 6 பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ நிதியுதவியாக மொத்தம் ₹10,01,206க்கான காசோலைகளை வழங்கினார். மேலும், செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலமாக கடந்த 2021 முதல் தற்போது வரை பத்திரிகையாளர் நல நிதி திட்டத்தின் கீழ் 13 பத்திரிகையாளர்களுக்கு மொத்தம் ₹25,11,339ம் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வைத்திநாதன், கூடுதல் இயக்குநர் (செய்தி) எஸ்.செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post மருத்துவ நிதியுதவியாக பத்திரிகையாளர்கள் 6 பேருக்கு ரூ10 லட்சத்துக்கான காசோலை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: