கேப்சிகம் மசாலா கிரேவி

தேவையான பொருட்கள்:

கேப்சிகம் – 1/2 கப்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
முந்திரி – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
காய்ந்த கஸ்தூரி மேத்தி – 1/4 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – 1/2
கப் சர்க்கரை – 1/4 தேக்கரண்டி (தேவைப்பட்டால்)
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் முந்திரியை வெந்நீரில் போட்டு சில நிமிடம் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்..பிறகு தக்காளியை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பூண்டு போட்டு வதக்கி, தக்காளி விழுதை போட்டு மெதுவாக வதக்கவும். ஒரு நிமிடம் வதங்கிய பின் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சிறு தீயில் வதக்கவும். பச்சை வாசனை போக குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும். பச்சை வாசனை போன பிறகு முந்திரி விழுது மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் கொஞ்சம் சேர்த்து நன்றாக கலந்து ஒரு முறை கொதிக்க விட வேண்டும்.கடைசியாக குடைமிளகாய் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, காய்ந்த கஸ்தூரி மேத்தியை கையில் அரைத்து தூவி இறக்கினால், சுவையான கேப்சிகம் கிரேவி ரெடி..

The post கேப்சிகம் மசாலா கிரேவி appeared first on Dinakaran.