அரசு பஸ்கள் மூலம் பொருள் போக்குவரத்து சேவை வழங்க திட்டம்

சென்னை: தமிழ்நாட்டின் அரசுப் போக்குவரத்து கழகங்கள், 8 கோட்டங்களின் 26 மண்டலங்கள் மூலம், 317 பணிமனைகளில் இருந்து 10,129 வழித்தடங்களில் 20,232 பேருந்துகளை இயக்கி பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது. பாரம்பரிய கட்டண வருவாயைத் தவிர, தற்போது பொருள்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் இடங்களில் உள்ள வாய்ப்பை பயன்படுத்தி, பொருள் போக்குவரத்து தொழிலுக்குள் நுழைய போக்குவரத்துக் கழகங்கள் முடிவு எடுத்துள்ளன.

அரசுப் போக்குவரத்து பணிமனைகளில் பொருள்களை சேமித்து வைக்கவும், இந்த முயற்சி பொது-தனியார் கூட்டுத் திட்ட முறையிலும் அமல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இது அரசுக்கும் தனியார் நிறுவனத்துக்கும் வருவாய் பகிர்வு அல்லது பிற வணிக ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயல்படும்.

இந்தத் திட்டத்தை மேற்கொள்ள, அரசு பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு நிறுவனத்தை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளது. இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகங்கள் புதிய வருவாய் வாய்ப்புகளைப் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும் என போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு பஸ்கள் மூலம் பொருள் போக்குவரத்து சேவை வழங்க திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: