இந்நிலையில் அரக்கோணம் அருகே முனியப்ப நாயுடு கண்டிகையில் வீட்டிக்கு சென்றிருந்த அரிகிருஷ்ணன் நேற்று காலை ஆவடிக்கு பைக்கில் திரும்பி சென்று கொண்டிருந்தார். திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஆற்காடுகுப்பம் பகுதியில் சென்ற போது சேதமடைந்த சாலைக்கு இடையில் ஏற்பட்டிருந்த விரிசலில் பைக் சக்கரம் சிக்கிக் கொண்டது. அப்போது சென்னையிலிருந்து திருப்பதி நோக்கி அதி வேகமாக சென்ற தமிழ்நாடு அரசு சுற்றுலா பஸ் பைக் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட அரிகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலின் பேரில் திருத்தணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கனகம்மாசத்திரம் போலீசார், இறந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சாலை விபத்தில் இறந்த அரிகிருஷ்ணன் சடலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உடலைப் பெறுவதில் இறந்தவரின் மனைவி மற்றும் அம்மா இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆவடிக்கு எடுத்துச் செல்ல மனைவியும், அரக்கோணம் அருகே முனியப்ப நாயுடு கண்டிகைக்கு எடுத்துச் செல்ல அம்மாவும் உறுதியாக இருந்தனர். இறுதியில் டி.எஸ்.பி கந்தன் பேச்சுவார்த்தை நடத்தி மனைவியின் விருப்பப்படி ஆவடிக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.
The post திருத்தணி அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிசலில் பைக் சக்கரம் சிக்கி வாலிபர் பலி appeared first on Dinakaran.