காஞ்சிபுரம், நவ.8: காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.45.75 லட்சம் மதிப்பில் புதியதாக அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடை ஆகியவை கட்டும் பணியினை எழிலரசன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி வைத்து பணியை தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டு நத்தப்பேட்டை பகுதி, 29வது வார்டு வேகவதி தெரு ஆகிய இடங்களில் புதியதாக அங்கன்வாடி மைய கட்டிடங்கள், 24வது வார்டு விஎன் பெருமாள் தெருவில் புதியதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது.
இதில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ரூ.45.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடை ஆகியவை கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, தாட்டித்தோப்பு பகுதி மக்கள் பயன்படும் வகையில், அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு திட்ட நிதி 2022-23ன் கீழ், ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் தாட்டித்தோப்பு பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் பொறியாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் சந்துரு, சுரேஷ், கமலக்கண்ணன், ஷாலினி, குமரன் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.45.75 லட்சத்தில் அங்கன்வாடி, ரேஷன் கடை: எழிலரசன் எம்எல்ஏ அடிக்கல் appeared first on Dinakaran.