ஆனால், கடந்த 6ம் தேதியே அபராதம் செலுத்தவில்லை என்று கூறி தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்து இலங்கை அரசு கொடுமையையும், அவமதிப்பையும் செய்துள்ளது. இதை மன்னிக்க முடியாது. தமிழக மீனவர்களை அவமதித்த இலங்கை அரசை இந்தியா கடுமையாக கண்டிப்பதுடன், பன்னாட்டு சட்டப்படி நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் குழுவை அனுப்பி, பிரதமரை சந்திக்கச் செய்து இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழக மீனவர்களுக்கு மொட்டை இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.