இதே போல், அண்ணா பூங்கா மற்றும் ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களிலும் சுற்றுலா பயணிகள் மிகுதியாக காணப்பட்டனர். ஏற்காடு ஏரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனிடையே, ஏற்காட்டில் நேற்று பகலில் வழக்கத்தை விட குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. அவ்வப்போது மேகக் கூட்டங்கள் சாலையில் தவழ்ந்தவாறு சென்றது, சுற்றுலா பயணிகளுக்கு உற்சாகத்தை அளித்தது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்பட ஏற்காட்டில் கடைகள் பலவற்றிலும் விற்பனை களை கட்டியது. சுற்றுலா பயணிகள் கார்-வேன்கள், இருசக்கர வாகனங்களில் வந்திருந்ததால், சேலம் அடிவாரம்- ஏற்காடு மலைப்பாதை, குப்பனூர்-ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து மிகுந்து காணப்பட்டது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஏற்காடு மலையிலும் சுற்றுலா இடங்களுக்கு செல்லக்கூடிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
The post தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்: படகு சவாரி செய்து குதூகலம் appeared first on Dinakaran.