அம்பத்தூர், ஜூலை 21: முகப்பேர் பகுதியில் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மணல், ஜல்லியை வீட்டின் அருகே வைத்திருந்தனர். இவை, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அம்பத்தூர் 7வது மண்டலம், 89வது வார்டு உதவி பொறியாளர் தரன் எச்சரித்துள்ளார். மேலும், நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கேட்டுள்ளார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். விசாரணையில், உதவி பொறியாளர் ஸ்ரீதரன் பணம் கேட்டு மிரட்டியது தெரிந்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
The post உதவி பொறியாளர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.