வங்கதேசத்தில் உள்ள தமிழர்களுக்கு உதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் விவரங்களை பெற்று அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியிருப்பதாக தகவல் வெளியான நிலையில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், இந்திய தூதரகம் மற்றும் தமிழ் அமைப்புகளை தொடர்பு கொண்டுள்ளோம். வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ள தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்க தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறையின் 24X7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

The post வங்கதேசத்தில் உள்ள தமிழர்களுக்கு உதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: