ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 61,000 கனஅடியாக அதிகரிப்பு: 5-வது நாளாக பரிசில் இயக்க தடை

தருமபுரி: கர்நாடக அணைகளில் நீர் திறக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று 48,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 61,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் பரிசில் இயக்கவும் 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் குடகு , மண்டியா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கபினி, கே.எஸ்.ஆர். அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்கு 80,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டிலூவுக்கு வினாடிக்கு 61,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அதிக நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 5-வது நாளாக பரிசில் சவாரி செய்வதற்கும் அருவிகளில் குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை முற்றிலும் தண்ணீரால் மூழ்கியுள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 61,000 கனஅடியாக அதிகரிப்பு: 5-வது நாளாக பரிசில் இயக்க தடை appeared first on Dinakaran.

Related Stories: