ஓ.பி.சி. ஒதுக்கீட்டில் 20,088 இடங்கள் என்பது பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ஓ.பி.சி. ஒதுக்கீட்டில் 20,088 இடங்கள் என்பது பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் திமுகவின் சட்டப்போராட்ட வெற்றியால் கடந்த 4 ஆண்டுகளில் ஒ.பி.சி ஒதுக்கீட்டில் 20,088 பேர் பயனடைந்துள்ளனர். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது,

சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது – இதுதான் நம் தலையில் எழுதியது எனச் சுருண்டுவிடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதிசெய்கிறோம்!

சமூகநீதிக்கான இந்த அரசியலையும் – போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, இந்நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம்! என தெரிவித்தார்.

The post ஓ.பி.சி. ஒதுக்கீட்டில் 20,088 இடங்கள் என்பது பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: