இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்டு மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம் ஆகிய மூன்று ஊராட்சிகள் உள்ளன. இது 10.27 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மொத்தம் 1,20,000 மக்கள் தொகை கொண்டது. இந்த காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு, குற்றபிரிவு என தலா ஒரு இன்ஸ்பெக்டர்கள், 5 சப் இன்ஸ்பெக்டர்கள், மற்றும் 75 போலீசார் என மொத்தம் 82 பேர் பணி அமர்த்தபட்டுள்ளனர். மேடவாக்கம் காவல் நிலையம் கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேடவாக்கம் காவல் நிலையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் தலைமை வகித்து, ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி புதிய காவல் நிலையத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கூடுதல் ஆணையர் மகேஸ்வரி, துணை ஆணையர் கவுதம் கோயல், உதவி ஆணையர் கிறிஸ்டின் ஜெய்சில், மேடவாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா மற்றும் போலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post தாம்பரம் மாநகர காவல் எல்லையில் மேடவாக்கம் காவல் நிலையம்: ஆணையர் அபின் தினேஷ் மோதக் திறந்தார் appeared first on Dinakaran.