காவலர்கள் குறைதீர் முகாமில் 199 காவலர்கள் கோரிக்கை மனு: உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை: காவலர்கள் குறைதீர் முகாமில், பெருநகர மேற்கு மண்டலத்தில் 199 காவலர்களிடம் போலீஸ் கமிஷனர் அருண் கோரிக்கை மனுக்களை பெற்றார். சென்னை ெபருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ‘காவலர்கள் குறைதீர் முகாம்’ நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் அருண் கலந்து கொண்டு பெருநகர மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் முதல் காவலர்களிடம் புகார் மனுக்கள் நேரடியாக பெற்றார். குறிப்பாக பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட 199 புகார் மனுக்களை கமிஷனர் அருண் பெற்றார்.

பிறகு இந்த புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் உயர்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சிறப்பு முகாமில் பெருநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர், மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார், தலைைம யிட இணை கமிஷனர் கயல்விழி மற்றும் துணை கமிஷனர் மேகலீனா ஐடன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post காவலர்கள் குறைதீர் முகாமில் 199 காவலர்கள் கோரிக்கை மனு: உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: