தாம்பரம்: பொழிச்சலூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. பல்லாவரம் தொகுதி, பொழிச்சலூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு, முகாமை தொடக்கி வைத்து, பொதுமக்களிடம் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, பட்டா பெயர் மாற்றம் மற்றும் புதிதாக வழங்குதல், குடிநீர் திட்டம் மற்றும் தெரு மின் விளக்குகள், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, கலைஞர் கனவு இல்ல திட்டம், ரேஷன் புதிய கார்டு, திருத்தம், நெடுஞ்சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். நிகழ்ச்சியில், துணை கலெக்டர் சாகிதா பர்வீன், உதவி திட்ட அலுவலர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் மனோகர், ஊராட்சி மன்ற தலைவர் வனஜா, துணை தலைவர் ஜோசப், வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி, ஊராட்சி செயலாளர் சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post பொழிச்சலூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.