பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே கடல் சீற்றத்தால் மணல் திட்டுகளாக மாறிய சாலையினை எம்எல்ஏ ஆய்வு

பொன்னேரி: பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே கடல் சீற்றம் காரணமாக, மணல் திட்டுகளாக மாறிய சாலையினை பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே கருங்காலி என்ற இடத்தில் நேற்று முன்தினம் கடல் சீற்றம் ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் பாலைவனம் போல் இருபுறமும், மணல் திட்டுகளாக மாறியதால் பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் மணலில் சிக்கி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து, நேற்று தினகரன் நாளிதழியில் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையறிந்த, பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், நேற்று பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே கடல் சீற்றம் காரணமாக மணல் குவிந்து பாலைவனம் போல் மாறிய சாலைகளை ஆய்வு செய்தார். பின்னர் அங்கு கூடிய பொதுமக்களிடம், தற்காலிகமாக 2 நாட்களுக்குள் கற்களை கொட்டி உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். எனவே, இப்பகுதி மக்கள் அச்சப்பட வேண்டாம். மேலும், 40 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை மாற்றுவதற்காக, 2024 -2025ம் ஆண்டிற்கான நிதியிலிருந்து ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இச்சாலையில், மிக விரைவில் மேம்பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடையே தெரிவித்தார்.
நிகழ்வின்போது தாங்கள் பெரும்புளம் தலைவர் தாஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் அத்திப்பட்டு புருஷோத்தமன், பழவேற்காடு ஜெயசீலன், நெய்த வாயல் வினோத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே கடல் சீற்றத்தால் மணல் திட்டுகளாக மாறிய சாலையினை எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: