மானியத்துடன் வங்கி கடனுதவி: நேர்காணல் மூலம் பயனாளிகள் தேர்வு

திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் முதல் தலைமுறையினருக்கான புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின், தொழில் முனைவோருக்கான நீட்ஸ் திட்டம் மற்றும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் வங்கி கடனுதவி பெற பயனாளிகள் நேர்காணல் நடைபெற்றது. உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அ.சேகர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்ராஜா, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மைய உதவி இயக்குநர் விஜயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வராணி, தட்கோ மேலாளர் இந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி பயனாளிகளிடம் நேர்காணலை நடத்தினார். இந்த நேர்காணலில் 111 பயனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 15 நரிக்குறவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர். அவர்கள் நேர்காணலில் ஊசி, மணி, பாசி, மற்றும் பேன்சி பூ மாலை போன்றவைகளை கொள்முதல் செய்வதற்காக மானியத்துடன் கடனுதவி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்கள். மேலும், இந்த நேர்காணலில் மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகள், உடற்பயிற்சி கூடம், உணவகங்கள் கட்டுமான தளவாடங்கள், பொறியியல் தளவாடங்கள், போட்டோகிராபி, சாமியானா பந்தல் வாடகை, தையற்கூடம் போன்றவை குறித்த மானியத்துடன் கடனுதவி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

The post மானியத்துடன் வங்கி கடனுதவி: நேர்காணல் மூலம் பயனாளிகள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: