ஆர்.கே.பேட்டை அருகே இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு

ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே சஹஸ்ரபத்மாபுரம் கிராமத்தில் மேய்ய்சல் புறம்போக்கு நிலத்தில் அக்கிராமத்தை சேர்ந்த 50 ஏழை எளிய குடும்பத்தினர் வீடுகள் கட்டிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்களில் 35 குடும்பங்களுக்கு இரண்டு கட்டங்களாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. 15 குடும்பங்களுக்கு மட்டும் இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் 15 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று தாசில்தார் விஜயகுமாரை சந்தித்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் கூறுகையில். இல்வச வீட்டுமனை பட்டா கேட்டு 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தாசில்தார்,ஆர்.டி.ஓ. கலெக்டரை பலமுறை சந்தித்து மனு கொடுத்து விட்டோம். இருப்பினும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், எங்களுக்கு அரசின் எந்த ஒரு நலதிட்ட உதவியும் கிடைக்கவில்லை. வீடு கட்டிக்கொள்ளவும் முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். கடந்த 2015ல் இரண்டு கட்டங்களாக 35 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அரசு எங்களுக்கு வழங்க சட்டத்தில் இடமில்லை என்று கூறுவதாக வேதனை தெரிவித்தனர். 20 ஆண்டுகளாக காத்திருக்கும் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

The post ஆர்.கே.பேட்டை அருகே இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு appeared first on Dinakaran.

Related Stories: