ஆந்திர மாநிலத்தை புனரமைக்க ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி வேண்டும்: ஒன்றிய அரசிடம் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை

டெல்லி: ஆந்திர மாநிலத்தை புனரமைக்க ரூ.1 லட்சம் கோடி வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளார். ஆந்திர பிரதேச முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன் முறையாக டெல்லி சென்ற சந்திராபாபு நாயுடு பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ராஜ்நாத் சிங், ஜி.பி.நட்டா உள்ளிட்ட 6 ஒன்றிய அமைச்சர்கள், 16வது நிதிகுழுவின் தலைவர் அரவிந்த் பனகாரியா ஆகியோரை சந்தித்து பேசினார்.

அப்போது ஆந்திர மாநிலத்தை புனரமைக்க ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று அவர் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% நிதிப் பற்றாக்குறை உச்சவரம்பை உயர்த்தி ஆந்திராவை மேலும் கடன் வாங்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். புதிய கட்டுமானத்திற்காக சுமார் ரூ.50 ஆயிரம் கோடி மூலதனம் வழங்குவதுடன், அமராவதி உட்கட்டமைப்பு மற்றும் போலவரம் பாசனத் திட்டத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

இத்துடன் துக்கிராஜுப்பட்டினம் துறைமுகத்தை மேம்படுத்த ஒன்றிய அரசின் ஆதரவை சந்திரபாபு நாயுடு நாடியதாகவும் கூறப்படுகிறது. சாலைகள், பாலங்கள், நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இழக்காக கொண்டு மூலதன முதலீட்டிற்காக ஆந்திராவுக்கு சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய சந்திராபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

The post ஆந்திர மாநிலத்தை புனரமைக்க ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி வேண்டும்: ஒன்றிய அரசிடம் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: