நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

புழல்:செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில், நீட்தேர்வு முறைகேடு மற்றும் யுஜிசி நெட் தேர்வில் குளறுபடி, மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த, ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத்தலைவர் அஹமது ரிஸ்வான் தலைமை தாங்கி, முதுகலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால் மாணவர்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

அதேபோல், மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு இம்முறையும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், தேர்வுக்கு தயாரான மாணவர்கள் கடுமையாக பாதித்துள்ளனர். எனவே தேர்வுகளை நேர்மையாகவும், முறையாகவும் நடத்த தகுதியற்ற ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும். மேலும் ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

அத்துடன் மாணவர்களுக்கு அவர்களின் மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட வேண்டும், நீட்தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர்கள் ரஹமத்துல்லா, முகம்மது ஜாபர், அப்துல்காபூர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

The post நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: