நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைந்துள்ள தாமிரபரணி நதிக்கரை படுகையில் இருந்து ஒரு நபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தவாறு ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்தார். இதனை அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் தீக்குளித்த நபரை உடனடியாக மீது நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்தான முதற்கட்ட விசாரணையில் சொத்து பிரச்னை காரணமாக தீக்குளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விவசாய நிலத்தை விற்றுவிட்டு, அந்த இடத்தை மீண்டும் கேட்டு பிரச்சனை செய்வதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் விசாரணைக்கு வர வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் அந்த தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தடுக்க சென்ற காவலர்கள் இருவரில் ஒருவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீக்குளித்ததில் காயமடைந்த சங்கரசுப்பு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த நபர் அளித்த புகாரில், அவருக்கு சொந்தமான நிலங்களை அவரது உறவினர்கள் முறைகேடாக அபகரித்து கொண்டதாக குற்றசாட்டு வைத்திருந்தார்.
இதுகுறித்தான விசாரணையில், நில விற்பனை சட்டப்படி தான் நடைபெற்றுள்ளது என அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயற்சித்தததாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் விவசாயி உயிரிழந்தார்.
The post நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு appeared first on Dinakaran.