முசிறி, மே16: திருச்சி மாவட்டம் தொட்டியம், தா.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாசன வாய்க்கால்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம், தா.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாசன வாய்க்கால்கள் உள்ளது. இதன் மூலம் மழைக்காலங்களில் ஏரிகளில் சேகரிக்கப்படும் தண்ணீர் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பேரு உதவியாக அமைந்துள்ளது. தற்போது கோடை காலம் என்ற நிலையில் அடுத்து பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக வறத்து வாய்க்கால் சீரமைத்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து முசிறியை சேர்ந்த உன்னுடைய விவசாயி கார்த்திக் என்பவர் கூறுகையில்,
முசிறி பகுதிகள் உள்ள பாசன வாய்க்கால்கள் முசிறி நகரை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மழைக்காலங்களில் தண்ணீர் எளிதாக ஏரியை அடைந்து நிரம்புவதன் மூலம் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் உதவியாக அமையும் என்று கூறினார்.
தா .பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு செல்லும் வரத்து வாய்க்கால்கள் சாலை ஓரங்களில் உள்ள மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் ஏரி, குளம், குட்டை ஆகியவற்றை தூர்வாரும் பணிகளை உடனடியாக துவங்கினால் அடுத்து வரும் பருவமழை தண்ணீர் வீணாகி விரயமாகாமல் ஏரி குளங்களில் தேங்கி நிற்கும். இதன் மூலம் மூன்று போகம் விவசாயம் சாகுபடி செய்வதற்கும், கிணற்றில் நீர்மட்டம் உயரவும் உதவியாக இருக்கும். தண்ணீர் தட்டுப்பாடும் இருக்காது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
The post முசிறி, தொட்டியம், தா.பேட்டையில் வரத்து வாய்க்கால்களை தூர்வார கோரிக்கை appeared first on Dinakaran.