மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில் பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு..!!

பெங்களூரு: பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தேஜஸ்வி சூர்யா மற்றும் காங்கிரஸின் சௌமியா ரெட்டி ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 2019 இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸின் பி கே ஹரிபிரசாத்தை எதிர்த்து பாஜகவின் சூர்யா 3,31,192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது காங்கிரசின் முன்னாள் எம்எல்ஏ சௌமியா ரெட்டி அங்கே களமிறக்கப்பட்டு உள்ளார்.

பெங்களூர் தெற்கில் மக்கள் இடையே நலன் அபிமானம் பெற்ற சௌமியா ரெட்டி பிரச்சாரத்தில் கவனம் பெற்று வருகிறார். தேஜஸ்வி சூர்யாவை எப்படியாவது தோல்வி அடைய செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில், பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில் தேஜஸ்வி சூர்யா மீது ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதத்தின் பேரில் வாக்கு சேகரித்து எக்ஸ் தளத்தில் தேஜஸ்வி சூர்யா வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், பெங்களூரு தெற்கு தொகுதியில் 80% பாஜகவினர், 20% காங்கிரஸ் கட்சியினர் உள்ளதாக பதிவிட்டிருந்தார்.

80% உள்ள பாஜகவினர் 20% தான் வாக்களிக்கின்றனர், ஆனால் 20% உள்ள காங் கட்சியினர் 80% வாக்களிப்பதாக கூறியிருந்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், ஜெயநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காலை ஏற்கனவே மற்றொரு பாஜக வேட்பாளர் சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில் பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: