மக்களவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளன: தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: மக்களவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது . 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்களும் , அரசியல் கட்சி பிரமுகர்களும் மிகுந்த ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.தமிழ்நாட்டில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.41%வாக்குப்பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது. விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 45% வாக்குகள் பதிவாகி உள்ளன.

காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்;

தர்மபுரி                        57.86%
நாமக்கல்                    57.67%
கள்ளக்குறிச்சி         57.34%
ஆரணி                         56.73%
கரூர்                              56.65%
பெரம்பலூர்               56.34%
சேலம்                          55.53%
சிதம்பரம்                  55.23%
விழுப்புரம்                54.43%
ஈரோடு                       54.13%
அரக்கோணம்        53.83%
திருவண்ணாமலை  53.72%
விருதுநகர்                 53.45%
திண்டுக்கல்              53.43%
கிருஷ்ணகிரி           53.37%
வேலூர்                         53.17%
பொள்ளாச்சி            53.14%
நாகப்பட்டினம்        52.72%
தேனி                            52.52%
நீலகிரி                        52.49%
கடலூர்                        52.13%
தஞ்சாவூர்                 52.02%
மயிலாடுதுறை      52.00%
சிவகங்கை              51.79%
தென்காசி                51.45%
ராமநாதபுரம்         51.16%
கன்னியாகுமரி     51.12%
திருப்பூர்                   51.07%
திருச்சி                      50.71%
தூத்துக்குடி             50.41%
கோயம்புத்தூர்     50.33%
காஞ்சிபுரம்             49.94%
திருவள்ளூர்            49.82%
திருநெல்வேலி      48.58%
மதுரை                     47.38%
ஸ்ரீபெரும்புதூர்    45.96%
வடசென்னை        44.84%
தென்சென்னை    42.10%
மத்தியசென்னை 41.47%

The post மக்களவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளன: தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: