நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.920 குறைந்து ரூ.53,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.6,635க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.86.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை appeared first on Dinakaran.